Search This Blog

Saturday, November 6, 2010

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"

தமிழ் வாழ்க :

மனிதனாய்  பிறந்த அனைவரும் பூமிக்கு வந்த பின் போராடி உழைத்து தான் பெருமை அடைய வேண்டும், ஆனால் இந்த விதிக்கும் விதிவிலக்குண்டு, பிறப்பிலேயே(தமிழ் பெற்றோருக்கு பிறந்ததால்)  பெருமையோடு இந்த பூமியை அடைபவன்  தமிழன் மட்டுமே, அந்த பெருமை  அவனுக்கு "தமிழ்"  கொடுத்த மாபெரும் கொடை.

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நம் தாய் தமிழை இன்று நாம் எப்படி மதிக்கிறோம் என்று பார்ததால், மனம் வேதனை அடைகிறது.  இதை சொல்வதினால் என்னை மொழி வெறியன் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். நான் மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதையும், தேவைக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்துவதையும் எதிர்க்கவில்லை. ஆனால் நம் வேர், அடையாளம் தாய் தமிழ் என்பதை எண்ணி பெருமிதம் கொள்ளவேண்டும் என்று தான் கூறுகின்றேன்.   

என்னை பொறுத்தவரை "தமிழ்" (அதாவது தாய் மொழி) என்பது வெறும் பேச்சுக்கருவி   கிடையாது, அது ஒரு உணர்வு (பசி,தூக்கம், சுகம், துக்கம் ,வலி ..... போன்றது).   
மற்ற மொழி பேசும் அனைவருக்கும் அந்த பெருமை உணர்வு இருக்கும் போது தமிழனுக்கு மட்டும் அது இல்லாமல் போனது பரிதாபத்திற்குரிய ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால் தமிழனுக்கு மற்றவர்களை விட மொழி உணர்வு அதிகமாக இருக்க வேண்டும்.

இதில் சில ஈனப்பிறவிகள் பொது இடங்களில் தமிழ் பேசுவதையே (சக தமிழனோடு) வெட்கமாக நினைக்கிறார்கள். 

மகா கவி பாரதி, "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா", என்றான். நல்ல வேளை , அந்த தமிழ் தாயின் தவப்புதல்வன், தமிழ் பேசுவதை வெட்கமாக நினைக்கும் ஈனப்பிறவிகள் வாழும் இந்த காலத்தில் இல்லை. 

என்னை பொறுத்தவரை, பெற்ற தாயை பற்றி பேச வெட்கப்படுபவர்களும்    தாய் மொழியை பேச வெட்கப்படுபவர்களும்  , நிச்சயமாக நல்ல பெற்றோருக்கு பிறந்திருக்க வாய்ப்பில்லை.

மறத்தமிழன்  
இரா. சாய் ஆனந்த்.     

1 comment:

  1. Good..but.."தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" was said by Bharathidhasan and not Bharathiyar....

    ReplyDelete