Search This Blog

Monday, April 25, 2011

தேச அவமானம் / National Shame


நண்பர்களே ,

நீண்ட காலமாக என் மனதை உருத்திக்கொண்டிருக்கும் எண்ணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைகிறேன்.


காந்தி, நேருவின் பிறந்தநாளை தேச தலைவர்கள் தினமாக கொண்டாடும் அரசுக்கு, இந்தியாவின் ஈடு , இணையற்ற என்றும் மறைவிலா உன்னத தலைவர் நேதாஜியின் பிறந்தநாளை (ஜனவரி 23 , 1897)  கொண்டாட  மறந்தது இழிவான செயல். இதை எண்ணி ஒவ்வொரு இந்தியனும் வெட்கித்தலைகுனிய வேண்டும்.

வரும் காலத்திலிருந்து, நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23 - தேசப்பற்று தினமாக மத்திய அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டு அந்நாள்  சுதந்திர தின விழாவிற்கு இணையாக கொடி ஏற்றி கொண்டாடப்பட வேண்டும்.

இனி எப்போதும் நேதாஜி, மறந்து போன தலைவர் என்ற அடைமொழியுடன் குறிப்பிடபடுதல் வெட்கப்பட வேண்டிய பாவச்செயல் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். தாய், தந்தையையும், தாய் நாட்டையும் மறப்பது எவ்வளவு இழிவானதோ அதற்கு ஒப்பானது நேதாஜியை மறந்து போன தலைவர் என்று குறிப்பிடுவது.

இந்திய விடுதலை போராட்டத்தின் உண்மையான தந்தையாகிய நேதாஜி அவர்களுக்கு மட்டற்ற மரியாதையை அளிப்பதில் இந்தியா பெருமிதம் கொள்ள வேண்டும். 

மேலும், மாவீரன் பகத்சிங் பிறந்தநாளான செப்டம்பர் 28 - புரட்சியாளர் தினமாக அரசு ஆணை பிறப்பித்து பெருமை சேர்க்க வேண்டும்.

மத்திய அரசு நேதாஜி போன்ற பெருமைக்குரிய தலைவர்களின் ஒப்பற்ற தியாகங்களை இன்றைய தலைமுறையும், வருங்கால சந்ததியும் நினைத்து போற்றிட வழிவகை செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நம்பிக்கையுடன் 
இரா. சாய் ஆனந்த்.

English Version

Hi Friends,

I would like to share a thought Disturbing me for a long period with you people.

While October 2nd  is celebrated as Gandhi Jayanthi, November 14th as children's day, We the people of India should be ashamed of not giving the due Respect to the Nations Greatest Ever Leader - "NETAJI Subhas Chandra Bose" . The Birth Day of Netaji (January 23rd) should be declared "PATRIOTISM DAY". Greatest Tribute should be paid for the IMMORTAL NETAJI on that day by the Entire Nation. (Similar to that of Independence day).

No longer NETAJI should be associated with the Term called "Forgotten Hero". While it will be considered Sin & Shameful to associate one's parents with the term forgotten mother, forgotten father. Similarly the Immortal NETAJI - The Real Father of Indian Independence Struggle should be given Respect of Greatest Magnitude by India.  

And September 28th, the day Bhagat Singh was Born should be declared "Revolutionary Day".

The Central Government should see to it that the GLORY of such Greatest Ever Leaders is remembered for ever, even by Generations to come.

With Hope
SaiAnand.R